திங்கள், 24 செப்டம்பர், 2012

மண்ணுக்குள்ளே ஒரு மனிதக் குரல் !!!!




அலையாய்  வந்து கொஞ்சுகிறாய்

மலையாய் வந்து நனைகிறாய்

தென்றலாய்  வீசி  வருடுகிறாய்

புயலாய்  வீசி கோபப்படுகிறாய்

இசையாய் பொழிந்து தாலாட்டுகிறாய்


நிலாவை ஒளிர்ந்து அழகு காட்டுகிறாய்

எனக்காக   இத்தனையும் செய்த

உன்னைவிட்டு பிரிய மனமில்லை

அதனால்தான் உன் மடியிலே

ஆறு அடியிலே உறக்கம் கொள்கிறேன்!!!!


ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

நீ...............................ளும் தேடல்




கதைக்குள் கதையாய் 

 கவிதைக்குள் காவியமாய்

புதிருக்குள் புதினமாய்

வாழ்க்கை  ஓடிக்கொண்டுதானிருக்கிறது  -என்

தேடலும் நீண்டு கொண்டுதானிருக்கிறது  

மெல்லினம் அவள்

                                                     உன் நடையில் நளினம்   

    உன் இதயமோ மெல்லினம்        

                         உன்னினத்திற்கு   நீ ஒரு இலக்கணம்                  

           நின்னை பற்றி சொல்லாம் ஆயிரம் கவிகள்     

                                       அதை கேட்க வேண்டும் நூறு புவிகள்  ! !

கண்ணீரின் கல்லறை



என் இரவு நேர மௌன கண்ணீரின்
                
                                           ரகசிய கல்லறை. . . .
                                          
                                          என் தலையணை!

அரிவாள்

வேற்றுமைக்கு உதவும்

வெட்டரிவாள் கூட

ஜாதி மதம் பாராமல்

அனைவர் கையிலும்....

வாரிசு

வாரிசுக்காக சொத்து சேர்த்த

 பலர் 

இன்று வாரிசு இல்லாமல்

முதியோர் இல்லத்தில்

நீர்

தன ஜனன மரணத்தின்

அடையாளம்  தொலைத்து

அலைகிறது. . . .  நீர்,

கடலாய், மலையாய் ,மேகமாய். . . . .

கரும் பிறை


                                                            கரும் பிறை ஒன்று

                                      கவிழ்ந்துள்ளது - அவள்

                                    புருவம் என்னும் பெயரில்!

நிஜம் தாண்டி வருவாயா

கனவில் மட்டும்

காதலாய் காதலோடு


நிஜத்தில் நிழலாய்


என்னோடு வருவாயா


என் அன்பே....

சுய உணர்வு

இளவேனிற் காலமாய் -என்
இந்தியா சுதந்திரம்
இழந்து நின்றது  ஆங்கிலேயனிடம்


இலையுதிர் காலமாய்-என்

இந்தியன் சுய உணர்வு
இழந்து  நிற்கிறது அரசியல்வாதிகளிடம்

கரை தொடுவாயோ

 எனக்குள்ளே உன்னை அடக்கி வைக்கிறேன்
என் இதய பெட்டகத்தில் உனை அடைத்து வைக்கிறேன்

ஏன் பொங்குகிறாய் அலை கடலாய் ?
ஏன் அடங்காமல் கொட்டி தீர்க்கிறாய் அருவியாய்?
என் கவிதையே!

ஏன் கவிதையே உனை ஒன்று கேட்கிறேன்..
ஹைக்குவாக்க  நினைத்தேன் கவிதையானாய்,
கவிதையாக்க முனைகின்றேன்
         
                      காவியமாவயோ இல்லை கரை தொடுவாயோ !!!!!!!!!!