ஞாயிறு, 21 அக்டோபர், 2012

மனம் மயங்குதே !!!!

நிலவே உனை கவி பாட நினைந்தேன்
தேய்கிறாய் , வளர்கிறாய்
திடீரென  தோன்றி மறைகிறாய் !

உன்னில் பல நிறங்கள்
மஞ்சள் வெள்ளையென
விசித்திரமூட்டுகிறாய் !

உனை ரசித்து கவி எழுத அமர்ந்தேன்
ரசித்து முடிக்கு முன்
சூரிய ஜன்னல் மூடி முகம் மறைத்தாய்!

ஒரு திங்களில் நீ இல்லாத
இரு தினங்கள் -வானம் போல
என் மனமும் கருமையாய் !

சில நேரம் வான பெண்ணின் திலகமாய்
சில நேரம் நட்சத்திர தோட்டத்தில் மயக்கும் மாதுவாய்!!!!

எத்தனை அவதாரம் நீ எடுப்பாய் ?
எத்தனை தரம் என் மனம் மயக்குவாய் ?

ஏங்குகிறேன்  தினம் உனை நினைத்து!
மயங்குகிறேன்  தினம் உனை பார்த்து!

வெள்ளி, 19 அக்டோபர், 2012

அழகு!!!

ஏ புள்ள ,இங்க வா !!

"என்ன பெத்தாரு ??

சட்டு புட்டுன்னு சொல்லு

நான் போய் சுள்ளி பொறுக்கணும்

இல்லனா  ஆத்தா திட்டும் "


"அடியேய் இந்தா

 ரோசா பூ ,தலைல சொருகிட்டு போ "

"அய்யே இந்த ரோசா வேணாம்

காகித ரோசா தான் வேணும் "

"அட புள்ள ஊரு உலகமெல்லாம்

 தான அழகுன்னு சொல்றாக "

"நீ தர்ற ரோசா பூ கிட்ட

நெறைய நிறம் இருக்கு ஆனா எனக்கு தராது

காகிதப்பூ தான் எனக்கு உதடுச்சாயம் தரும்

எனக்கு அந்த காகிதப்பூ தான் அழகு"

திங்கள், 24 செப்டம்பர், 2012

மண்ணுக்குள்ளே ஒரு மனிதக் குரல் !!!!




அலையாய்  வந்து கொஞ்சுகிறாய்

மலையாய் வந்து நனைகிறாய்

தென்றலாய்  வீசி  வருடுகிறாய்

புயலாய்  வீசி கோபப்படுகிறாய்

இசையாய் பொழிந்து தாலாட்டுகிறாய்


நிலாவை ஒளிர்ந்து அழகு காட்டுகிறாய்

எனக்காக   இத்தனையும் செய்த

உன்னைவிட்டு பிரிய மனமில்லை

அதனால்தான் உன் மடியிலே

ஆறு அடியிலே உறக்கம் கொள்கிறேன்!!!!


ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

நீ...............................ளும் தேடல்




கதைக்குள் கதையாய் 

 கவிதைக்குள் காவியமாய்

புதிருக்குள் புதினமாய்

வாழ்க்கை  ஓடிக்கொண்டுதானிருக்கிறது  -என்

தேடலும் நீண்டு கொண்டுதானிருக்கிறது  

மெல்லினம் அவள்

                                                     உன் நடையில் நளினம்   

    உன் இதயமோ மெல்லினம்        

                         உன்னினத்திற்கு   நீ ஒரு இலக்கணம்                  

           நின்னை பற்றி சொல்லாம் ஆயிரம் கவிகள்     

                                       அதை கேட்க வேண்டும் நூறு புவிகள்  ! !

கண்ணீரின் கல்லறை



என் இரவு நேர மௌன கண்ணீரின்
                
                                           ரகசிய கல்லறை. . . .
                                          
                                          என் தலையணை!

அரிவாள்

வேற்றுமைக்கு உதவும்

வெட்டரிவாள் கூட

ஜாதி மதம் பாராமல்

அனைவர் கையிலும்....