ஞாயிறு, 21 அக்டோபர், 2012

மனம் மயங்குதே !!!!

நிலவே உனை கவி பாட நினைந்தேன்
தேய்கிறாய் , வளர்கிறாய்
திடீரென  தோன்றி மறைகிறாய் !

உன்னில் பல நிறங்கள்
மஞ்சள் வெள்ளையென
விசித்திரமூட்டுகிறாய் !

உனை ரசித்து கவி எழுத அமர்ந்தேன்
ரசித்து முடிக்கு முன்
சூரிய ஜன்னல் மூடி முகம் மறைத்தாய்!

ஒரு திங்களில் நீ இல்லாத
இரு தினங்கள் -வானம் போல
என் மனமும் கருமையாய் !

சில நேரம் வான பெண்ணின் திலகமாய்
சில நேரம் நட்சத்திர தோட்டத்தில் மயக்கும் மாதுவாய்!!!!

எத்தனை அவதாரம் நீ எடுப்பாய் ?
எத்தனை தரம் என் மனம் மயக்குவாய் ?

ஏங்குகிறேன்  தினம் உனை நினைத்து!
மயங்குகிறேன்  தினம் உனை பார்த்து!

1 கருத்து: