மனம் மயங்குதே !!!!
நிலவே உனை கவி பாட நினைந்தேன்
தேய்கிறாய் , வளர்கிறாய்
திடீரென தோன்றி மறைகிறாய் !
உன்னில் பல நிறங்கள்
மஞ்சள் வெள்ளையென
விசித்திரமூட்டுகிறாய் !
உனை ரசித்து கவி எழுத அமர்ந்தேன்
ரசித்து முடிக்கு முன்
சூரிய ஜன்னல் மூடி முகம் மறைத்தாய்!
ஒரு திங்களில் நீ இல்லாத
இரு தினங்கள் -வானம் போல
என் மனமும் கருமையாய் !
சில நேரம் வான பெண்ணின் திலகமாய்
சில நேரம் நட்சத்திர தோட்டத்தில் மயக்கும் மாதுவாய்!!!!
எத்தனை அவதாரம் நீ எடுப்பாய் ?
எத்தனை தரம் என் மனம் மயக்குவாய் ?
ஏங்குகிறேன் தினம் உனை நினைத்து!
மயங்குகிறேன் தினம் உனை பார்த்து!
hiiii charu.........many wrote poems on nila.......u too...i want something more and different from u..
பதிலளிநீக்கு